Home இலங்கை வெளிநாடுகளுக்கு தப்பிய 236 குற்றச் சந்தேகநபர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

வெளிநாடுகளுக்கு தப்பிய 236 குற்றச் சந்தேகநபர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

0
image

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 236 பேருக்கு சர்வதேச ரீதியில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் 96 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற 37 பேர், 2025 பெப்ரவரி மாதம் முதல் இதுவரை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மேலும், சர்வதேச பொலிஸாரின் (INTERPOL) ஒத்துழைப்புடன் 42 சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லும் குற்றச் சந்தேகநபர்களை அடையாளம் கண்டு, அவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Source: https://samugammedia.com/red-alert-for-236-crime-suspects-who-fled-abroad-1787998834

NO COMMENTS

Exit mobile version