Home இலங்கை வெளிநாட்டில் பதுங்கியுள்ள முன். அமைச்சர்களை கைது செய்ய நீல, சிவப்பு அறிவிப்புகள்! – அரசு அதிரடி

வெளிநாட்டில் பதுங்கியுள்ள முன். அமைச்சர்களை கைது செய்ய நீல, சிவப்பு அறிவிப்புகள்! – அரசு அதிரடி

0
image

நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, வெளிநாடுகளில் இருப்பதாக நம்பப்படும் முன்னாள் அமைச்சர்களையும் பாதாள உலகக் குழுத் தலைவர்களையும் நாட்டுக்கு கொண்டு வருவதற்காக எதிர்காலத்தில் நீல அறிவிப்புகள் அல்லது சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர், 

முன்னாள் அமைச்சர்களாக இருந்தாலும் அல்லது பாதாள உலகக் குழு தலைவர்களாக இருந்தாலும், நீதிமன்றம் பிறப்பிக்கும் ஒவ்வொரு பிடியாணைக்கும் பொலிஸ் கட்டாயமாக நடவடிக்கை எடுக்கும் என கூறியுள்ளார்.

பல முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக ஏற்கனவே பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவை தொடர்பான வழக்குகளில் சட்ட நடைமுறைகள் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் திணைக்களம் நீதிமன்ற உத்தரவுகளை சட்டத்திற்கமைவாக நடைமுறைப்படுத்தி வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேக நபர்களை நாட்டுக்கு திரும்ப அழைத்து வர தேவையான இடங்களில் சர்வதேச ஒத்துழைப்பை அரசாங்கம் நாடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Source: https://samugammedia.com/blue-and-red-notices-to-arrest-former-ministers-hiding-abroad–governments-bold-move-1781849406

NO COMMENTS

Exit mobile version