பொத்துவில் – பாணம பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மதிய வேளையில் பசரச்சேனை பகுதியில் வீதியோரமாக சென்றுகொண்டிருந்த சிறுவன் மீது, வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் சிறுவனும் படுகாயமடைந்தனர்.
சம்பவத்தையடுத்து இருவரும் உடனடியாக பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிறுவன் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 8 வருடங்களும் 10 மாதங்களும் வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளதுடன், வீதிகளில் வாகனங்களை இயக்கும் போது வேகக் கட்டுப்பாடு மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வின் அவசியத்தையும் மீண்டும் நினைவூட்டியுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Source: https://samugammedia.com/8-year-old-boy-dies-after-motorcycle-loses-speed-control-1780718311
