Home இலங்கை சமூகம் மகள் கண்முன் பலியான ஓய்வுபெற்ற கிராம சேவையாளர்

மகள் கண்முன் பலியான ஓய்வுபெற்ற கிராம சேவையாளர்

0

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மோட்டார் சைக்கிளுடன் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் உயிரிழந்துள்ளார்.      

இந்த கோர விபத்து வென்னப்புவ புதிய வீதியில் கொரககாஸ் சந்தி பகுதியில் இன்று (17.10.2025) காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து பயணித்த இளம் பெண் மற்றும் வேனின் சாரதி காயமடைந்து மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை

இந்த விபத்தில் உயிரிழந்தவர் கொஸ்வத்தையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம சேவகர் என தெரியவந்துள்ளது.

இறந்தவரின் மகளே காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்திற்குள்ளான வேனை வென்னப்புவ காவல்துறை போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version