முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நியூயோர்க் தொடருந்து நிலையத்தில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ஐவர் காயம்

நியூயோர்க்கில் தொடருந்து நிலையத்தில் மர்மநபர் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தொடருந்து நிலைய பயணி ஒருவர் உயிரிழந்ததுடன்  5 பேர் காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ப்ரான்க்ஸ் பகுதியில் உள்ள மவுண்ட் ஈடன் ஏவ் தொடருந்து நிலையத்தில் நேற்று(12) மாலை 4.30 மணியளவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் படுகாயமடைந்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 34 வயதான நபர் ஒருவரே  சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

யுக்திய நடவடிக்கையில் மேலும் 680 பேர் கைது

யுக்திய நடவடிக்கையில் மேலும் 680 பேர் கைது

தொடருந்து நிலையத்தில்

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் பயணித்துக் கொண்டிருந்த தொடருந்தில் அவருக்கும் அங்கிருந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

நியூயோர்க் தொடருந்து நிலையத்தில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ஐவர் காயம் | 1 Killed 5 Injured In New York Subway Shooting

இந்நிலையில், தொடருந்து நிலையத்தில் இறங்கியதும் அந்த நபர் தன் கையிலிருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சுட்டுள்ள நிலையிலேயே  இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக நியூயோர்க் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய நபரை தீவிரமாக தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க குடியுரிமை பெறுவதில் முதலிடம் பிடித்த நாடு எது தெரியுமா!

அமெரிக்க குடியுரிமை பெறுவதில் முதலிடம் பிடித்த நாடு எது தெரியுமா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்