முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருகோணமலை – நெல்லிக்குளம் பாறை உடைப்பு : கைது செய்யப்பட்ட 10 பேர் பிணையில் விடுவிப்பு

திருகோணமலை(Trincomalee) – சேனையூர், நெல்லிக்குளம் பாறை உடைப்பு விவகாரத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டு
பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை – மூதூர் கிழக்கு, சேனையூர் கிராம சேவகர் பிரிவில்
உள்ள நெல்லிக்குளம் மலைத் தொடரின் பாறைகளை உடைப்பதற்கு கடந்த சனிக்கிழமை (08) பாறை
உடைப்பு இயந்திரத்துடன் உடைப்பு வேலைகளை ஆரம்பிக்க முயன்ற போது அப்பகுதி
மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அத்துடன், பாறை உடைப்பு வேலைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

மக்கள் கடும் எதிர்ப்பு

எனினும், செவ்வாய்க்கிழமை (11) காலை 9.45 மணிக்கு மீண்டும் பாறை உடைப்பு வேலைகளை
ஆரம்பித்த போது மக்கள் கடும் எதிர்ப்பை வெளியீட்டுள்ளனர்.

திருகோணமலை - நெல்லிக்குளம் பாறை உடைப்பு : கைது செய்யப்பட்ட 10 பேர் பிணையில் விடுவிப்பு | 10 Arrested Released On Bail Trincomalee

இதன்போது, 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறை சட்டக் கோவை 81 இன் அடிப்படையில் சம்பூர்
பொலிஸார் 10 பேரை செவ்வாய்க்கிழமை (11) கைது செய்து பொலிஸ் பிணையில்
விடுவித்துள்ளனர்.

இந்நிலையில், விடுவிக்கப்பட்ட 10 பேரும் மூதூர் நீதிமன்ற நீதிமன்றில் நேற்று(12) புதன்கிழமை
முன்னிலையாகியதுடன் நீதிமன்றமானது இன்று(13) அவர்களை
சொந்தப் பிணையில் விடுவித்ததோடு குறித்த பிரதேசத்தை இம் மாதம் 15 ஆம்
திகதியன்று நீதிவான் பார்வையிடுவதாக மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை - நெல்லிக்குளம் பாறை உடைப்பு : கைது செய்யப்பட்ட 10 பேர் பிணையில் விடுவிப்பு | 10 Arrested Released On Bail Trincomalee

இதேவேளை, இதில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை தலைவர் சண்முகம்
குகதாசன் குறித்த பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

பாறை உடைப்பு 

இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

“இந்த பாறையை உடைப்பதால் பல்வேறு இன்னல்களை மக்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்பதுடன்.
எங்களது வாழ்வாதாரம் இங்கு தான் உள்ளது.

திருகோணமலை - நெல்லிக்குளம் பாறை உடைப்பு : கைது செய்யப்பட்ட 10 பேர் பிணையில் விடுவிப்பு | 10 Arrested Released On Bail Trincomalee

அத்துடன், விவசாயச் செய்கை கால் நடை வளர்ப்பு
போன்றன இதன் மூலம் பாதிக்கப்படலாம் .

அரசாங்கம் மக்களுக்காக தான் இருக்கிறது. மக்கள் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்