கனடா விமான நிலையத்தில் பாரவூர்தியுடன் ரூபா 100 கோடியை திருடிய கொள்ளைக் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு அவர்களிடம் இருந்து 400 கிலோ தங்கக்கட்டிகள் மற்றும் ரூபா 16 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
கனடாவின் டொரன்டோ நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு ஏர் கனடா விமானம் மூலம் பிரிங்ஸ் என்ற நிறுவனம் ரூபா 100 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகள் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவற்றை வர்த்தக காரணங்களுக்காக கொண்டு வந்துள்ளனர்.
இந்தியாவின் சனத்தொகை எவ்வளவு தெரியுமா : ஐ.நா வெளியிட்ட அறிவிப்பு
மர்மகும்பல்
இதையடுத்து அவை பாரவூர்தியில் ஏற்றப்பட்டு அதிகாரிகளின் ஒப்புதலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அப்போது மர்மக்கும்பல் ஒன்று ரூபா 100 கோடி பொருட்களுடன் அந்த பாரவூர்தியை போலி ஆவணங்கள் சமர்ப்பித்து திருடிச் சென்றுள்ளனர்.
பிரதமர் நெதன்யாகுவின் விடாப்பிடி : அதிகரிக்கும் போர் பதற்றம்
கைது
கடந்த ஆண்டு நடந்த இந்தக் கொள்ளை சம்பவத்தால் நாடு முழுவதும் அதிர்ச்சிக்குள்ளாகியதுடன் இதுகுறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது குறித்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் அறிமுகமாகும் ஈ-விசா! குடியேற்றவாசிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |