Home இலங்கை 11 இலட்சத்திற்கு ஏலம் போன ஒரு மாம்பழம்..! யாழில் முருகன் ஆலயத்தில் சம்பவம்

11 இலட்சத்திற்கு ஏலம் போன ஒரு மாம்பழம்..! யாழில் முருகன் ஆலயத்தில் சம்பவம்

0
image

யாழ்ப்பாணம் – நாகர்கோயில் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முருகையா தேவஸ்தானத்தின் வருடாந்த பெருந்திருவிழாவையொட்டி நடத்தப்பட்ட மாம்பழத் திருவிழாவில், மாம்பழம் ஒன்று 11 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று (02) நடைபெற்ற மாம்பழத் திருவிழாவின் போது இந்த ஏலம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மாம்பழத்தை ஏலத்தில் எடுப்பதற்காக பக்தர்களிடையே கடும் போட்டி நிலவிய நிலையில், இறுதியாக  11 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே திருவிழாவில் மாம்பழம் 10 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போன நிலையில், இம்முறை அதன் ஏலத்தொகை மேலும் ஒரு இலட்சம் ரூபாயால் அதிகரித்துள்ளது.

ஏலத்தின் மூலம் கிடைக்கப்பெறும் தொகை ஆலயத்தின் திருப்பணிகள் மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Source: https://samugammedia.com/a-mango-worth-11-lakh-went-missing-incident-at-murugan-temple-in-jaffna-1788429792

NO COMMENTS

Exit mobile version