முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

13 ஆம் திருத்தம் தொடர்பில் மகிந்தவிற்கு வழங்கப்பட்ட வாக்குறுதி – வெளிப்படுத்தும் சுமந்திரன்

மறைந்த மன்மோகன் சிங் இந்தியாவின் (India) பிரதமராக இருந்த காலத்தில் 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதிகாரப் பகிர்வு முறை ஏற்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை மகிந்த ராஜபக்சவிடமிருந்து பெற்றிருந்தார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் (M.A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

மன்மோகன் சிங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்
குறிப்பிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் (வயது 92) (Manmohan Singh) மறைவுக்கு
எமது மனப்பூர்வமான அஞ்சலிகள்.

இலங்கைத் தமிழர் விவகாரம்

அவர் இந்தியாவின் பிரதமராக இருந்த காலத்தில்
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மிகவும் காத்திரமான பங்களிப்பைச்
செய்திருந்தார்.

13 ஆம் திருத்தம் தொடர்பில் மகிந்தவிற்கு வழங்கப்பட்ட வாக்குறுதி - வெளிப்படுத்தும் சுமந்திரன் | 13Th Amendment Implementation India Influvance

2011 இல் அப்போதைய இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனான
கூட்டறிக்கையில் “13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, அதிலிருந்து
கட்டியெழுப்பி அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு முறை ஏற்படுத்தப்படும்” என்ற
வாக்குறுதியைப் பெற்றவர்.

அவர் பிரதமராக இல்லாத சமயத்திலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச்
சந்திக்கச் சென்றபோது நாம் அவரை, அவரது இல்லத்தில் சந்தித்து நன்றி கூறி
உரையாடியிருந்தோம்.

qஇந்தியாவின் பொருளாதார எழுச்சிக்குக் காரணகர்த்தாவாக
இருந்த அன்னாரின் மறைவுக்கு மீண்டும் எமது மனப்பூர்வமான அஞ்சலிகள் என்றுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.