Home இலங்கை சமூகம் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

0

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 14 இராமேஸ்வர கடற்றொழிலாளர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார்(Mannar) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை(Sri lanka) கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த கடற்றொழிலாளர்கள் தலைமன்னார் கடற்படையினரால் நேற்று (5) அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களும், இழுவைப் படகுகளும் தலைமன்னார் கடற்படை முகாமில் ஒப்படைக்கப்பட்டது.

விளக்கமறியலில் வைக்க உத்தரவு

தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் குறித்த கடற்றொழிலாளர்களை நேற்று மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

விசாரணைகளின் பின்னர் மன்னார்
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது, மன்னார் நீதவான் குறித்த 14 இந்திய
கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க
உத்தரவிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version