Home இலங்கை சமூகம் யாழில் தவறான முடிவெடுத்து 14 வயது மாணவி உயிரிழப்பு

யாழில் தவறான முடிவெடுத்து 14 வயது மாணவி உயிரிழப்பு

0

யாழ்.(Jaffna) வட்டுக்கோட்டை- பொன்னாலை பகுதியில் மாணவி
ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாதக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பொன்னாலை மேற்கு
பகுதியை சேர்ந்த நடனேஷ்வரன் தாரணி (வயது 14) என்ற மாணவியே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது, இன்றையதினம் (22) இடம்பெற்றுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உயிரிழந்த மாணவிக்கும் அவரது தாய் மற்றும் சகோதரனுக்கு இடையே இன்று காலை
முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

 தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

மாணவியின் உறவினர் ஒருவர் நேற்று முன்தினம்
உயிரிழந்துள்ள நிலையில் குறித்த மாணவியின் குடும்பத்தினர் அங்கு
சென்றிருந்தனர்.

இதன்போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தவறான முடிவெடுத்துள்ளார்.

அவரது
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம்
மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://ibctamil.com/article/14-year-old-girl-death-in-ponnalai-jaffna-1732295316

NO COMMENTS

Exit mobile version