Home இலங்கை குற்றம் தென்னிலங்கையில் சொகுசு மாளிக்கைக்குள் சிக்கிய வெளிநாட்டவர்கள் – விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

தென்னிலங்கையில் சொகுசு மாளிக்கைக்குள் சிக்கிய வெளிநாட்டவர்கள் – விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

0

அளுத்கம பகுதியில் சொகுசு வீட்டை வாடகைக்கு எடுத்து, இணையம் வழியாக பெரிய அளவிலான நிதி மோசடிகளில் ஈடுபட்ட 16 சீன நாட்டினர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அளுத்கம பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்குரிய சீன நாட்டவர்களிடம் இருந்த 20 ஆப்பிள் கையடக்க தொலைபேசிகள், 50 சிம் அட்டைகள், மடிக்கணினிகள் மற்றும் பல பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பணம் மோசடி

இந்த சந்தேக நபர்கள் நீண்ட காலமாக வீட்டை வாடகைக்கு எடுத்தல், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து ஒன்லைனில் பணம் மோசடி செய்து பணம் பெறுதல் மற்றும் மக்களை ஏமாற்றுதல் உள்ளிட்ட பல கணினி குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர்.

சந்தேகத்திற்குரிய சீன நாட்டினர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த அதிகாரி சஜீவ மேதவத்தவின் அறிவுறுத்தலின் பேரில் அளுத்கம பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version