Home இலங்கை சமூகம் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட செஞ்சோலை படுகொலையின் 19வது நினைவேந்தல்

வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட செஞ்சோலை படுகொலையின் 19வது நினைவேந்தல்

0

செஞ்சோலை படுகொலையின் 19வது நினைவஞ்சலி வவுனியாவில் (Vavuniya) அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தால் வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 3098 நாட்களாக போராட்டம் மேற்கொள்ளும் பந்தலில் குறித்த அஞ்சலி நிகழ்வு இன்று (14.08.2028) இடம்பெற்றது.

விமானப்படை நடத்திய தாக்குதல் 

இதன்போது உயிரிழந்தவர்களின் நினைவாக அகவணக்கம் செலுத்தப்பட்டு மலரஞ்சலி நிகழ்த்தப்பட்டது. 

நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கலந்துகொண்டிருந்தனர்.

முல்லைத்தீவு (Mullaitivu) – வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் 2006 ஆம் ஆண்டு தலைமைத்துவ பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது சிறிலங்கா விமானப்படை நடத்திய தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் 53 பேர் உட்பட 61 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version