Home இலங்கை சமூகம் வங்காள விரிகுடாவில் ஒரே நேரத்தில் உருவான இரண்டு புயல்கள்: வெளியான காரணம்

வங்காள விரிகுடாவில் ஒரே நேரத்தில் உருவான இரண்டு புயல்கள்: வெளியான காரணம்

0

வங்காள விரிகுடாவில் ஒரே நேரத்தில் இரண்டு சூறாவளிகள் உருவாகுவது புவி வெப்பமடைதலின் விளைவாகும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உலகிலேயே வேகமாக வெப்பமடையும் வெப்பமண்டல கடலாக இந்தியப் பெருங்கடல் கருதப்படுகின்றது.

டித்வா சூறாவளி இலங்கையை தாக்கிய அதே நேரத்தில் சென்யார் சூறாவளி இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் மலேசியாவில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது.

கடல் நீர் வெப்பமடைதல்

கடல் நீர் வெப்பமடைவதால் இவ்வாறு புயல்கள் ஏற்படுவதாக இந்தியப் பேராசிரியர் பஞ்ச பிரகாஷ் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, புயலின் தாக்கத்தினால் மொனராகலை மாவட்டம் அதிக பாதிப்புக்குள்ளாகியிருந்த நிலையில்,நேற்று மொனராகலை மாவட்டத்தில் 32.6 பாகை செல்சியஸ் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version