2788 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த இரண்டு
போதைப்பொருள் வர்த்தகர்கள் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கைது
செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – காத்தான்குடி, பாலமுனை பிரதேசத்தில் வைத்து 30 மற்றும் 35 வயதுடைய இரு சந்தேகநபர்களும் நேற்றுமுன் தினம் மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் மீட்பு
30 வயதுடைய நபரிடமிருந்து 1228 மில்லிகிராம் போதைப்பொருளும் மற்றும் 35 வயதுடைய
நபரிடமிருந்து 1560 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


