நாகலோகத்திலிருந்து வந்ததாக கூறிய இரண்டு பேரை வனவளப் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ரிட்டிகல பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியின் கொடிகல மலைப் பகுதியில் வைத்து இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுமதியின்றி குறித்த வனப் பகுதிக்குள் பிரவேசித்து, நிர்க்காதியாகியிருந்த நிலையில் அவர்களை மீட்ட அதிகாரிகள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தாம் நாகலோகத்தைச் சேர்ந்த ஓர் ரிஷி எனவும் தியானம் செய்வதற்காக ரிடிகல காட்டுக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் ரஜங்கனய மற்றும் மாத்தளை லக்கல பகுதிகளைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான இருவரும் 35 வயதானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காட்டுக்குள் அனுமதியின்றி பிரவேசிப்பது தடை என அறிவித்தல் பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இருவரும் சட்டவிரோதமான முறையில் காட்டுக்குள் பிரவேசித்துள்ளனர்
.
அதிகாரிகள் விசாரணை செய்த போது ஒருவர் நாகலோகத்தைச் சேர்ந்த ரிஷி எனவும் ஏனையவர் தனக்கு பணிவிடை செய்பவர் எனவும் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்களிடமிருந்து தீப்பெட்டி, கமரா, ஆடைகள், சங்கு உள்ளிட்ட பல பொருட்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் கஹட்டகஸ்திகிலிய நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
