Home இலங்கை சமூகம் முறையான அடையாளங்கள் இன்றி 20இலட்சம் சிம் அட்டைகள்: சபையில் குற்றச்சாட்டு

முறையான அடையாளங்கள் இன்றி 20இலட்சம் சிம் அட்டைகள்: சபையில் குற்றச்சாட்டு

0

Courtesy: Sivaa Mayuri

நாட்டில் சில குற்றச் சம்பவங்களைக் கண்டறிவதில் முக்கியமான பிரச்சினையாக, முறையான அடையாளங்கள் இன்றிய சிம் அட்டைகளின் பாவனை காணப்படுவகதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

இவற்றுள் சுமார் இரண்டு மில்லியன் சிம் அட்டைகள் முறையான அடையாளங்கள் இன்றி பாவனையில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

2018 ஆம் ஆண்டுக்கு முன்னர் சிம் அட்டைகளை பெற்றுக்கொள்ளும் போது அடையாள அட்டைகள் கோரப்படவில்லை.

முறையான அடையாளங்கள்

எனினும் புதிய சட்டத்தின்படி, சிம் அட்டையை பெற்றுக்கொள்வதற்கு அடையாள அட்டையை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என கனக ஹேரத் நாடாளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், 2018 ஆம் ஆண்டுக்கு முன்னர் முறையான அடையாளங்கள் இன்றி பெறப்பட்ட சுமார் இரண்டு மில்லியன் சிம் அட்டைகள், தற்போது பாவனையில் உள்ளதாகவும், இது சில குற்றச் சம்பவங்களைக் கண்டுபிடிப்பதில் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version