Home இலங்கை சமூகம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை : கர்தினால் மல்கம் ரஞ்சித் வெளியிட்ட தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை : கர்தினால் மல்கம் ரஞ்சித் வெளியிட்ட தகவல்

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து தற்போதைய அரசாங்கம் நடத்தி வரும் விசாரணைக்கு இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் (Malcolm Ranjith) ஆண்டகை நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

அறிக்கை ஒன்றை வெளியிட்டே பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இதனை தெரிவித்துள்ளார். 

மேலும், 2019ஆம் திகதி நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கை மூடி மறைப்பதற்கு எதிராக நாங்கள் உண்மையையும் நீதியையும் கோருகிறோம்.

உண்மையான குற்றவாளிகள்

மேலும் உண்மையான குற்றவாளிகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் வெளிப்படும் வரை பாதிக்கப்பட்டவர்களும் நீதிக்காக காத்திருக்கிறார்கள்.

நாடு பொருளாதார ரீதியாகவும் பல வழிகளிலும் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக கூறிய கர்தினால், இன்று மக்களிடையே ஒரு குறிப்பிட்ட நம்பிக்கை உணர்வு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஒரு பொறுப்பான அரசியல் வர்க்கமும் மக்கள் நம்பும் ஒரு ஜனாதிபதியும் இருப்பதாகவும், கத்தோலிக்க மக்களில் பெரும்பாலோர் ஜனாதிபதியை ஆதரிப்பதாகவும், திருச்சபை அரசாங்கத்துடன் நல்ல உறவைப் பேணுவதாகவும், ஒத்துழைப்புக்கான நல்ல வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

you may like this

https://www.youtube.com/embed/ufQDMYF5El4

NO COMMENTS

Exit mobile version