முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பதை குறித்து கீழே காணலாம்.

GOAT:

தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமான பொருட் செலவில் வெளிவந்த திரைப்படம் GOAT. வெங்கட் பிரபு இயக்கியிருந்த இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர். யுவன் இசையமைத்துள்ளார். பிரஷாந்த், பிரபு தேவா, லைலா, சினேகா, மீனாட்சி, மோகன், ஜெயராம், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

2024 - ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2024 Best Tamil Movies

அமரன்:

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கடந்த 2024 – ம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் அமரன். இப்படத்தை உலகநாயகன் கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து இருந்தது. சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

2024 - ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2024 Best Tamil Movies

அரண்மனை 4:

சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2024 – ம் ஆண்டு மே மாதம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் அரண்மனை 4. இப்படத்தில் தமன்னா, ராஷி கன்னா, யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர். ஹிப் ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

2024 - ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2024 Best Tamil Movies

வித்தியாசமாக காதலர் தினத்தை கொண்டாடிய நயன்தாரா.. வைரலாகும் வீடியோ

வித்தியாசமாக காதலர் தினத்தை கொண்டாடிய நயன்தாரா.. வைரலாகும் வீடியோ

மகாராஜா:

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 2024ஆம் ஆண்டில் வெளிவந்து வெற்றியடைந்த திரைப்படம் மகாராஜா. நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சாச்சனா, அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், சிங்கம் புலி, முனீஸ்காந்த், அபிராமி, மம்தா மோகன்தாஸ் ஆகியோர் நடித்திருந்தனர்.

வித்தியாசமான திரைக்கதை, கிளைமாக்ஸ் ட்விஸ்ட் என அனைவரையும் மிரள வைத்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.

2024 - ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2024 Best Tamil Movies

ராயன்:

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்து 2024 – ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ராயன். இது நடிகர் தனுஷின் 50வது திரைப்படமாகும். A சான்றிதழுடன் வெளியான படத்தை ரத்தம் தெறிக்க தெறிக்க எடுத்திருந்தார் தனுஷ்.

இப்படத்தில் தனுஷுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா முதல் முறையாக வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார். மேலும் துஷாரா விஜயன், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் என பலரும் நடித்திருந்தனர்.

2024 - ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2024 Best Tamil Movies

வாழை:

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2024 – ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி வெளியான திரைப்படம் வாழை. தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் பல குழந்தை நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மாரி செல்வராஜின் உண்மை கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களை உணர்ச்சி ரீதியாக உடைந்துவிடும் அளவுக்கு உருவாக்கப்பட்டிருந்தது.

2024 - ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2024 Best Tamil Movies

லப்பர் பந்து:

அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தயாராகி கடந்த 2024 – ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி வெளியான படம் லப்பர் பந்து.

உள்ளூர் அளவிலான ரப்பர் பந்து கிரிக்கெட்டையும் குடும்பத்தையும் மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இதில் மறைந்த நடிகர் விஜயகாந்த் குறித்த காட்சிகள், இளையராஜ பாடல்கள், அட்டகத்தி தினேஷ் கதாபாத்திரம் என மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறக்கூடிய விஷயங்கள் பல இடம் பெற்றிருந்தன.

2024 - ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2024 Best Tamil Movies

மெய்யழகன்:

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க 96 பட புகழ் பிரேம்குமார் இயக்கத்தில் தயாரான படம் மெய்யழகன்.
கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடிப்பில் இப்படம் கடந்த 2024 – ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி வெளியாகி இருந்தது.

காதலை மட்டுமே மையப்படுத்தி 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் உறவுகளை வைத்து இயக்கியிருக்கும் இந்த மெய்யழகன் படத்திற்கு மக்கள் பேராதரவு கொடுத்துள்ளார்கள்.

2024 - ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2024 Best Tamil Movies

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.