Home இலங்கை சமூகம் நாடு முழுவதும் 206 வீதிகள் தடை!

நாடு முழுவதும் 206 வீதிகள் தடை!

0

நாடு முழுவதும் வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் காரணமாக மொத்தம் 206 வீதிகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 10 பாலங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் அவதானம்

இதேவேளை நாட்டில் நிலவும் மோசமான அனர்த்த நிலை காரணமாக, பல வீதி போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

தற்போது அநுராதபுரம் மற்றும் நுவரெலியா ஆகிய நகரங்களுக்கான தரை வழி அணுகல் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அத்துருகிரிய இடைமாறல் பகுதி வெள்ளத்தில் மூழ்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், பொதுமக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்த்து, மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version