Home இலங்கை 22ஆவது திருத்தச் சட்டமூலம் வாக்கெடுப்புக்கு செல்லுமா?

22ஆவது திருத்தச் சட்டமூலம் வாக்கெடுப்புக்கு செல்லுமா?

0
image

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும் எனவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

 அரசின் சகல தீர்மானங்களையும் செயற்பாடுகளையும் எதிர்க்கும் நிலைப்பாட்டிலேயே எதிர்க்கட்சியினர் உள்ளனர். சகலதையும் எதிர்க்கும் அவர்களின் நோக்கத்துக்கு ஏற்ப அரசால் செயற்பட முடியாது.

அரசமைப்பின் 22ஆவது திருத்தமானது மக்களின் நலனுக்காகவும் நீதிமன்றக் கட்டமைப்பு மறுசீரமைப்புக்காகவுமே கொண்டுவரப்பட்டது என்பதால், இதனால் நீதிமன்றத்தின் சுயாதீனத்துக்கும் பாதுகாப்புக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

பிரதம நீதியரசர் மீது எதிர்க்கட்சியினர் கொண்டுள்ள வெறுப்பு காரணமாகவே இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை உயர்நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்பதால், இது தொடர்பில் அரசால் எதனையும் தீர்மானிக்க முடியாது.

நாடாளுமன்றப் பெரும்பான்மையுடன் மக்கள் வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்குச் செல்ல நாம் தயார். நீதிமன்றத் தீர்ப்புக்கு அப்பால் எம்மால் செயற்பட முடியாது  – என்றார்.

Source: https://samugammedia.com/will-the-22nd-amendment-bill-go-to-a-vote-1788062605

NO COMMENTS

Exit mobile version