Home இலங்கை அரசியல் இலங்கை அரசியலை குழப்பத்திற்கு உள்ளாக்கியுள்ள வர்த்தமானி அறிவித்தல்

இலங்கை அரசியலை குழப்பத்திற்கு உள்ளாக்கியுள்ள வர்த்தமானி அறிவித்தல்

0

இலங்கையில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் 22ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் என்பது நாட்டின் அரசியலை மேலும் குழப்பத்திற்குள்ளாக்கும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

22ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் இந்திய நாளிதழ் வெளியிட்ட செய்தியினை மேற்கோள் காட்டியே சுமந்திரன் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட சுமந்திரன்,

22ஆவது திருத்த சட்டமூலம்

அரசமைப்பின் 22வது திருத்த சட்டமூலத்தை தற்போது ஏன் கொண்டுவரவேண்டும்? அதற்கான தேவை என்ன?

இந்த சட்டமூலமானது வாக்காளர்களிற்கு குழப்பத்தை ஏற்படுத்துகின்றது என்பதை அரசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

அரசமைப்பில் ஆணை வழங்கப்பட்டுள்ளபடி ஐந்தாண்டு முடிவில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதை இது சிக்கலிற்குட்படுத்தும்.

22ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டுபெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டால் அது குறித்து சர்வஜனவாக்கெடுப்பை நடத்துவதற்கான அதிகாரத்தை அரசமைப்பு ஜனாதிபதிக்கு வழங்குகின்றது.

ரணில் விக்ரமசிங்க

எனினும், தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இது அதனை மேலும் குழப்பத்திற்குள்ளாக்கும் எனவும்
தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் இது எந்ததாக்கத்தையும் ஏற்படுத்தாத நிலையில் சர்வஜனவாக்கெடுப்பை நடத்துவது அவசியமற்ற விடயம்” என அவர் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பில் இந்திய நாளிதழ் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

”ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் பின்னணியில் புதிய ஊகங்களுக்கு மத்தியில், இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் ஜூலை 19 அன்று அறிவித்தது.

ஜூலை 18, 2024 திகதியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவிப்பு, ஜனாதிபதியின் பதவிக் காலத்தை அல்லது நாடாளுமன்றத்தின் காலத்தை நீட்டிக்க பொதுவாக்கெடுப்பு தேவையா என்பது குறித்த அரசியலமைப்பு விதியை திருத்துவது தொடர்பானது.

இந்த சீர்திருத்தத்தில் “ஆறு ஆண்டுகளுக்கு மேல்” என்ற கால நீட்டிப்பைக் சுட்டிக்காட்டுகிறது.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவிக்கையில்,

“அடுத்த வாரம் ஜனாதிபதித் தேர்தல் திகதியை அறிவிப்போம். வெளியாகியுள்ள வர்த்தமானி இந்த தேர்தலுடன் தொடர்புடையது அல்ல.

பொருளாதாரம் வீழ்ச்சி

இரண்டும் தனித்தனி விடயங்கள்.

இந்த ஆண்டு செப்டம்பர் 17 மற்றும் அக்டோபர் 16 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு இந்த வர்த்தமானி எந்த தாக்கத்தையும் மேற்கொள்வது.

2022 ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தபோது, ​​முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மக்கள் எழுச்சியால் வெளியேறிய பின்னர் ஒரு தேர்தலுக்காக நாட்டுமக்கள் காத்திருக்கின்றனர்.” என நாளிதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையின் முக்கிய சட்டத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணியும் அரசியலமைப்பு நிபுணருமான ஜயம்பதி விக்ரமரத்னவின், ”தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் எந்த மாற்றமும் இல்லை.

ஜனாதிபதியின் பதவிக்கால வரம்பு மற்றும் இந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டவை இரண்டு வேறுபட்ட பிரச்சினைகள்” என்று அவர் தெரிவித்ததாக குறித்த நாளிதழ் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version