இந்த ஆண்டு இதுவரை 230 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளதாக காவல்துறை உயிர்காக்கும் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்றும் அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த காலகட்டத்தில் நீரில் மூழ்கிய 195 பேரின் உயிரை காவல் துறை உயிர்காக்கும் பிரிவு காப்பாற்றியுள்ளது.
மீட்கப்பட்டவர்கள்
மீட்கப்பட்டவர்களில் 135 உள்ளூர் மக்களும் 60 வெளிநாட்டினரும் அடங்குவர்.
நேற்றையதினமும்(05) தெதுறு ஓயாவில் நீராடச்சென்று ஐவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
