Home இலங்கை குற்றம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது!

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது!

0

நாடளாவிய ரீதியில் நேற்று(1) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது
செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று(2) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

கைது செய்யப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 254 பேரும், திறந்த
பிடியாணைகளுக்கமைய 150 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது

இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 26 பேரும், கவனக்குறைவாக வாகனம்
செலுத்திய 21 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 அத்துடன், பிற போக்குவரத்துக் குற்றங்களுக்காக 4 ஆயிரத்து 336 பேர் பொலிஸாரால்
கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version