Home இலங்கை குற்றம் விசேட சுற்றிவளைப்பில் பொலிஸாரிடம் சிக்கிய 277 பேர்

விசேட சுற்றிவளைப்பில் பொலிஸாரிடம் சிக்கிய 277 பேர்

0

நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு
நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 277 பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 86 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 112
பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 73 பேரும், கஞ்சா செடிகளுடன் 6 பேரும்
பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட சுற்றிவளைப்பு 

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 61 கிராம் 161 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 744 கிராம் 377 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் 1 கிலோ 507 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 2 இலட்சத்து 57 ஆயிரத்து 991 கஞ்சா செடிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25

Source: https://tamilwin.com/article/277-more-people-caught-with-drugs-1745678976

NO COMMENTS

Exit mobile version