Home இலங்கை குற்றம் பிள்ளையானால் சிக்கும் முக்கிய புள்ளிகள்! உறுதிப்படுத்திய பொலிஸார்

பிள்ளையானால் சிக்கும் முக்கிய புள்ளிகள்! உறுதிப்படுத்திய பொலிஸார்

0

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சந்தேக நபர்கள் தற்போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கிணங்க (PTA) 72 மணி நேரம் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 இந்த மூவரில் ஒருவர், பிள்ளையானின் நெருங்கிய உறவினர் எனக் கூறப்படுகிறது.

பிள்ளையானின் வாக்குமூலம்

அவர், கல்முனை பகுதியில் நேற்று(8) குற்றப்புலனாய்வுத்துறையினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை மற்றும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில் அவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே. புஷ்பகுமார் (இனிய பாரதி ) மற்றும் மற்றொரு நபரான சிவலிங்கம் தவசீலன் ஆகியோர் இதற்கு முந்தைய நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும், பிள்ளையானிடம் நடந்த விசாரணையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்கள் எனவும், இது தொடர்பாக பல கொலை வழக்குகளின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version