திருகோணமலை- நிலாவெளி பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது இன்று(18) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் திரியாயைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் மாணிக்கம் நடராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
அத்தோடு, அவரது மனைவி பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
திரியாய் காணி மீட்புப் போராட்டத்தில் தன்னையும் ஈடுபடுத்தி பல செயற்பாடுகளில்
இவர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
