Home இலங்கை சமூகம் யாழில் வெற்றிலை துப்பிய வியாபாரிக்கு நேர்ந்த கதி

யாழில் வெற்றிலை துப்பிய வியாபாரிக்கு நேர்ந்த கதி

0

பொது இடத்தில் வெற்றிலை மென்று உமிழ்ந்த மீன் வியாபாரிக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தண்டப்பணம் அறவிட்டுள்ளது.

குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் (Jaffna) – பருத்தித்துறை நகர்  மீன் சந்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், குறித்த நபர் பருத்தித்துறை நகரில் உள்ள மீன் சந்தையில் மீன் வியாபாரம் செய்யும் போது வெற்றிலை மென்று பொதுவிடத்தில் எச்சிலை உமிழ்ந்துள்ளார்.

வழக்கு தாக்கல்

இந்நிலையில் அவருக்கு எதிராக பருத்தித்துறை நகரசபையின் பொதுச் சுகாதார பரிசோதகரால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது மேற்படி குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் 3000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version