Home இலங்கை சமூகம் வீதி அபிவிருத்தி பணிக்கு 31 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

வீதி அபிவிருத்தி பணிக்கு 31 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

0

மன்னார் நானாட்டான் பிரதேச சபைக்கு உட்பட்ட ஆத்தி குளி மாளிகைப்பிட்டி கிராம
உள்ளக வீதி புனரமைப்பு பணிகள் நேற்றைய தினம்(16) மாலை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த வீதியானது 800 மீட்டர் நீளம் கொண்டதாகும். வீதிக்கு 31.7 மில்லியன்
ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், வடமாகாண வீதி அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து நிதி
ஒதுக்கப்பட்டுள்ளது.

வடமாகாண வீதி அபிவிருத்திக்கான நிதியில்

வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து
வைக்கப்பட்டு பிரதேச சபையினால் ஒப்பந்ததாரர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் நாட்டான் பிரதேச சபை தவிசாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபை
பொறியியலாளர், நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம மக்கள் என பலரும்
கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version