Home இலங்கை பொருளாதாரம் இந்தியாவிடம் இருந்து இலங்கைக்கு 350 மில்லியன் டொலர் கடனுதவி

இந்தியாவிடம் இருந்து இலங்கைக்கு 350 மில்லியன் டொலர் கடனுதவி

0

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இன்று கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்படும் முக்கிய இருதரப்பு அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் விரிவாக மீளாய்வு செய்யப்பட்டது.

சந்திப்பின் முடிவில், 350 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இந்திய ரூபாய் அடிப்படையிலான கடன் வசதிகளுக்கான (INR-denominated Lines of Credit) ஒப்பந்தங்கள் இரு தரப்பினருக்கும் இடையில் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

புனரமைப்பு உதவி தொகை

சூறாவளி டிட்வா அனர்த்தத்தை அடுத்து இந்தியா அறிவித்த 450 மில்லியன் அமெரிக்க டொலர் புனரமைப்பு உதவித் தொகுப்பின் ஒரு பகுதியாக,  இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.

டிட்வாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள பின்வரும் பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அவசர புனரமைப்பு பணிகள்சேதமடைந்த உட்கட்டமைப்புகளை மீளக் கட்டியெழுப்புதல் அனர்த்தத்தின் பின்னரான அவசர கொள்முதல் தேவைகள்இந்தியாவின் அண்டை நாடு முதன்மை கொள்கை மற்றும் மகாசாகர் தொலைநோக்கின் கீழ், இயற்கை அனர்த்தங்களின் போது இலங்கைக்கு உடனடி உதவிகளை வழங்குவதில் இந்தியா முன்னுரிமை அளித்து வருவதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

Source: https://ibctamil.com/article/350-million-doller-loan-assistance-ind-to-srilanka-1785928839

NO COMMENTS

Exit mobile version