Home இலங்கை சமூகம் டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

0

சர்வதேச தொழிலாளர் அமைப்பு நடத்திய ஆய்வின்படி, இலங்கையில் சுமார் 374,000
தொழிலாளர்கள் டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தொழிலாளர்கள் வேறு இடங்களில் வேலை செய்யவோ அல்லது தரமான வேலைவாய்ப்பைக்
கண்டுபிடிக்கவோ முடியாவிட்டால், மாதத்திற்கு 48 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
வருமான இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பேரழிவு நிலைமை

 வடக்கு மற்றும் கிழக்கு, குறிப்பாக மத்தியப் பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன

இதன் காரணமாக விவசாயம் மற்றும் மீன்பிடித் துறை கடுமையாகப்
பாதிக்கப்பட்டுள்ளதாக ILO குறிப்பிட்டுள்ளது.

வெள்ளத்தால் நெல் உற்பத்தி செய்யும் 23 சதவீத நிலங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் தேயிலைத் தொழிலில் உற்பத்தி இழப்புகளின் முதற்கட்ட மதிப்பீடு 35
சதவீதம் வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பேரழிவு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பதற்கு
உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று ILO என்ற சர்வதேச தொழிலாளர்
அமைப்பு கோரிக்கை விடுக்கிறது.

NO COMMENTS

Exit mobile version