Home இலங்கை பொருளாதாரம் சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது தவணை குறித்து நம்பிக்கை வெளியிட்டுள்ள ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது தவணை குறித்து நம்பிக்கை வெளியிட்டுள்ள ஜனாதிபதி

0

Courtesy: Sivaa Mayuri

அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் அல்லது பெப்ரவரி மாத தொடக்கத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ், மூன்றாவது தவணையை இலங்கை பெறும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் 14ஆம் திகதியன்று நாட்டிற்கு வர இருக்கிறது.

மூன்றாவது தவணை

இந்தநிலையில், மூன்றாவது மதிப்பாய்வை நிறைவு செய்ய பொதுவாக மூன்று மாதங்கள் ஆகும் என்றும் ஜனாதிபதி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு தேர்தல்கள் காரணமாக மூன்றாவது பரிசீலனை தாமதமாகியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, மூன்றாவது மீளாய்வை முன்னதாக திட்டமிட்டபடி செப்டெம்பரில் ஆரம்பித்திருந்தால், டிசம்பருக்குள் அதனை முடித்திருக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், மூன்றாவது தவணையைப் பெற்ற பிறகு ஓரளவு பொருளாதார ஸ்திரத்தன்மையை அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version