Home இலங்கை குற்றம் கொழும்பில் வெசாக் பார்க்க சென்ற இளைஞர்களால் கொலை செய்யப்பட்ட நபர்

கொழும்பில் வெசாக் பார்க்க சென்ற இளைஞர்களால் கொலை செய்யப்பட்ட நபர்

0

கொழும்பில் வெசாக் பார்க்க சென்ற இளைஞர்களால் நபர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

நான்கு இளைஞர்களுக்கும், நிரந்தர குடியிருப்பு இல்லாத ஒருவருக்கும் இடையே தெமட்டகொட மேம்பாலத்தின் கீழ் ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்துள்ளது.

இதன் காரணமாக 38 வயதுடைய நபரை இளைஞர்கள் தடிகளால் அடித்து உதைத்து கொலை செய்தனர்.

கொலை

இந்தக் கொலை நேற்று முன்தினம் இரவு நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக பொரளை, வனாத்தமுல்ல பகுதியை சேர்ந்த 19 முதல் 22 வயதுக்குட்பட்ட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்த நபரை கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தது,

எனினும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version