Home உலகம் எட்டு மாதங்களின் பின் பூமிக்கு திரும்பிய நாசா விண்வெளி வீரர்கள்

எட்டு மாதங்களின் பின் பூமிக்கு திரும்பிய நாசா விண்வெளி வீரர்கள்

0

நாசாவின் (NASA) விண்வெளி வீரர்கள் நால்வர், எட்டு மாதத்திற்கு பின்பு தற்போது பூமியை வந்தடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விண்வெளி வீரர்கள் நேற்றைய தினம் (25) பூமியை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவைச் (America) சேர்ந்த மேத்யூ டொமினிக் (Dominique), மைக்கேல் பாரட் (Michael Barrett), ஜீனெட் எப்ஸ் (Jeanette Epps), ரஷ்யாவைச் (Russia) சேர்ந்த அலெக்சாண்டர் கிரெபென்கின் (Alexander Grebenkin) ஆகிய நான்கு விண்வெளி வீரர்களை ஸ்பேஸ் எக்ஸ் (Space X) நிறுவனத்தின் விண்கலம் மூலம் விண்ணுக்கு அனுப்பியது.

விண்வெளி மையம்

இவர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்ட நிலையில் நால்வரும் தங்கள் ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு கடந்த பெப்ரவரி மாதத்துக்கு முன் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும்.

இந்தநிலையில், அங்கு போயிங் விண்கலத்தில் (Boeing Starliner) தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விண்வெளி வீரர்கள் இன்றி குறித்த விண்கலம் கடந்த செப்டம்பரில் பூமி வந்தடைந்ததுடன் தொடர்ந்து, மில்டன் புயலால் மீண்டும் விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.

இதற்கிடையில் சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams) மற்றும் பட்ச் வில்மோர் (Barry E. Wilmore) ஆகிய இரு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு எட்டு நாட்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக சென்றிருந்தனர்.

ஆய்வுப் பணி 

அவர்களும் பூமிக்கு திரும்ப முடியாமல் அங்கேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதன் பின்னர் அவர்களின் ஆய்வுப் பணி எட்டு நாட்களில் இருந்து எட்டு மாதங்களாக நீட்டிக்கப்பட்டது.

அத்தோடு, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சமீபத்தில் இரண்டு விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைத்தது.

இந்தநிலையில், மார்ச் மாதம் விண்வெளிக்குச் சென்ற நான்கு விண்வெளி வீரர்களும் சுமார் எட்டு மாதத்துக்கு பிறகு தற்போது பூமிக்கு பத்திரமாக வந்தடைந்துள்ளனர்.

மெக்சிகோ வளைகுடாவில் புளோரிடா கடற்கரை அருகே இன்று (25) அதிகாலை அவர்களது விண்கலம் பாராசூட் உதவியுடன் கடலில் விழுந்த நிலையில் விண்வெளி வீரர்கள் படகுகள் மூலம் கரைக்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version