Home இலங்கை சமூகம் மலையகத்திற்கான 42 தொடருந்து சேவைகள் இரத்து

மலையகத்திற்கான 42 தொடருந்து சேவைகள் இரத்து

0

மலையகத்திற்கான 42 தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையக தொடருந்து பாதையில் தொடருந்து தடம் புரண்டமை காரணமாக இன்று (21) கொழும்பு கோட்டையிலிருந்து திட்டமிடப்பட்டிருந்த கண்டி, மாத்தளை மற்றும் பிராந்திய சேவைகள் உட்பட 22 பயணிகள் தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து பதுளை மற்றும் நானுஓயா வரை இயக்க திட்டமிடப்பட்ட 4 தொடருந்து சேவைகள் கண்டி தொடருந்து நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மூன்று நாட்களில் இரத்து செய்யப்பட்ட தொடருந்துகள்

இந்த சேவைகள் திட்டமிட்ட நேரத்தில் கண்டி தொடருந்து நிலையத்திலிருந்து பதுளைக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், நானுஓயா மற்றும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரை இயக்கப்படும் 04 தொடருந்து சேவைகள் பேராதனை மற்றும் கண்டி வரை பயணிக்கவுள்ளன.

மலையக தொடருந்து பாதையில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதால் இந்த மூன்று நாட்களில் இரத்து செய்யப்பட்ட மொத்த தொடருந்து சேவைகளின் எண்ணிக்கை 42 ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version