Home இலங்கை குற்றம் நாட்டில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்! பலர் உயிரிழப்பு

நாட்டில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்! பலர் உயிரிழப்பு

0

நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 43 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 43 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 29 பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

பொலிஸார் விசாரணை

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 94 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Source: https://tamilwin.com/article/43-shooting-incidents-recorded-in-sri-lanka-1746777243

NO COMMENTS

Exit mobile version