யாழ்ப்பாணம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிறுவுனர் தந்தை சா.ஜே.வே.செல்வநாயகத்தின்
48ஆவது நினைவு நாளும் நினைவுப் பேருரை நிகழ்வும் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில்
நடைபெற்றது.
இந் நிகழ்வு இன்று (26.04.2025) காலை நடைபெற்றது.
மலரஞ்சலி
தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் ஏற்பாட்டில் யாழிலுள்ள தந்தை
செல்வநாயகம் நினைவுத் தூபியில் நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து சமாதியில் மலரஞ்சலியும்
செலுத்தப்பட்டது.
செய்தி – தீபன்
வவுனியா
வவுனியாவில் தந்தை செல்வாவின் 48 ஆவது நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
வவுனியா, மணிக்கூட்டு கோபுர சந்தியில் அமைந்துள்ள அவரது சிலை முன்பாக இன்று
(26.04) காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
[H8R607
செய்தி – திலீபன்
மட்டக்களப்பு
இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் 48 ஆவது நினைவு
தினம் இன்று மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு
நகரில் உள்ள தந்தை செல்வா சதுர்க்கத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
செய்தி – குமார்
