Home இலங்கை குற்றம் ஐந்து வருடங்களுக்குள் பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்த 49 பேர் மரணம்

ஐந்து வருடங்களுக்குள் பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்த 49 பேர் மரணம்

0

கடந்த 2020ம் ஆண்டு தொடக்கம் 2025 வரையான காலப்பகுதிக்குள் பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்த 49 பேர் மரணித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

49மரணங்கள்

பொலிஸ் தடுப்புக்காவலில் இருக்கும் சந்தர்ப்பத்தில் பொலிசாருடன் அநாவசிய மோதல்களை ஏற்படுத்திக் கொள்ளாமல் தவிர்த்துக் கொள்வது குறித்து பொதுமக்களைத் தெளிவூட்டும் வகையில் குறித்த நிகழ்வை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்பாடு செய்திருந்தது.

அதன் போது வெளியிடப்பட்ட தகவல்களின் பிரகாரம் கடந்த ஐந்து வருடங்களுக்குள் பொலிஸ் தடுப்புக் காவலில் 49மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

அதே ​போன்று பொலிசாருடனான மோதல்கள் காரணமாக மேலும் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

இனிவரும் காலங்களில் இவ்வாறான மரணங்கள் ஏற்படுவதைத் தடுக்க தேவையான வழிகாட்டல்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version