Home இலங்கை 5 நாட்களாக மாயமான நபர் – சாமிமலை ஓயாவில் இன்று சடலமாக மீட்பு!

5 நாட்களாக மாயமான நபர் – சாமிமலை ஓயாவில் இன்று சடலமாக மீட்பு!

0
image

ஸ்டரஸ்பி தோட்ட குமரி பிரிவில்காணாமல் போன மீனவர் கடந்த 5 நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

ஸ்டரஸ்பி தோட்ட குமரி பிரிவில் உள்ள 55 வயதுடைய தொழிலாளி கடந்த 11 ம் திகதி முதல் காணாமல் போயிருந்தார். 

அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டு வந்த ஸ்டரஸ்பி தோட்ட தொழிலாளர்கள் 5 நாளாக ஈடுபட்டு வந்தனர். 

குமரி பிரிவில் உள்ள ஆற்றங்கரை அருகில் அவரது காலணி கிடப்பதை கண்டு அப் பகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு மவுஸ்சாகலை நீர்த்தேக்கம் வரை தேடுதல் பணி முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை முதல் தேடுதல் நடத்தி வந்த வேளையில் கவரவலை தோட்ட அப்பர் குரூடன் பகுதியில் ஊடறுத்து செல்லும் சாமி மலை ஓயாவில் சடலம் ஒன்று ஒதுங்கி கிடப்பதை கண்ட மக்கள்  மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கினர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அங்கு ஹட்டன் பொலிஸ் நிலைய கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை  சேகரித்தனர். 

அதன் பின்னர் உடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

Source: https://samugammedia.com/a-person-who-had-been-missing-for-5-days—his-body-was-recovered-today-in-samimalai-oya-1781611154

NO COMMENTS

Exit mobile version