Home இலங்கை குற்றம் அநுராதபுரத்தில் புதையல் தோண்டிய ஐவர் கைது

அநுராதபுரத்தில் புதையல் தோண்டிய ஐவர் கைது

0

அநுராதபுரம் மாவட்டத்தின் கல்நேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய ஐவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்நேவ பொலிஸ் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மாந்திரீகர் ஒருவரைத் தருவித்து சட்டவிரோதமாக புதையல் தோண்டுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் பொலிஸார் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

ஐவர் கைது

அதன்போது ஹோமம் வளர்த்து புதையல் தோண்டிக் கொண்டிருந்த நிலையில் மாந்திரீகர் உள்ளிட்ட ஐந்து பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புதையல் தோண்டுவதற்காக அவர்கள் பயன்படுத்திய கருவிகளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை கல்நேவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Source: https://tamilwin.com/article/5-held-for-treasure-hunt-in-sl-1751207568

NO COMMENTS

Exit mobile version