முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வீட்டில் வளர்க்க வேண்டிய முக்கிய மருத்துவ தாவரங்கள் – எவை தெரியுமா..!

நோய்களைக் குணப்படுத்தும் அல்லது சிகிச்சைக்கு உதவக்கூடிய மருத்துவ குணங்களைக் கொண்ட மூலிகைகளே ‘மருத்துவ தாவரங்கள்‘ ஆகும்.

பண்டைய காலத்திலிருந்தே பல்வேறு நோய்களுக்கு எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் சிகிச்சையளிக்க எண்ணற்ற மூலிகைகள் மற்றும் மருத்துவ தாவரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்தகைய 5 வகை தாவரங்களின் மருத்துவப் பண்புகளையும் பலன்களையும் காண்போம்.

கற்றாழை

கற்றாழை, பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக பல்வேறு மருத்துவ பயன்பாட்டிற்கு உதவும் மற்றொரு பிரபலமான மருத்துவ தாவரமாக உள்ளது.

வீட்டில் வளர்க்க வேண்டிய முக்கிய மருத்துவ தாவரங்கள் - எவை தெரியுமா..! | 5 Most Powerful Medicinal Plants And Benefits

புதர் தாவரங்களில், கற்றாழை அதன் அழகியல் சார்ந்த நன்மைகளுக்காக இன்றைய காலகட்டத்தில் மிகவும் பிரபலமான ஒன்றாகவுள்ளது.

அழகு சார்ந்த எண்ணற்ற நற்பலன்களுக்காக கற்றாழை பெயர் பெற்றது, இது சுருக்கங்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது, வறண்ட சருமத்தை ஈரப்பதமாக்குகிறது, அரிக்கும் தோலழற்சிக்கு சிகிச்சையளிக்கிறது, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் முகப்பருவை எதிர்த்துப் போராடுகிறது.

அழகியல் சார்ந்த நன்மைகள் மட்டுமில்லாமல், கற்றாழையில் உள்ள ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட், ஆன்ட்டி-மைக்ரோபியல் பண்புகள் மலச்சிக்கலை குறைக்கவும், உடலில் உள்ள தேவையற்ற நச்சுக் கழிவுகளை வெளியேற்றவும், காயங்களுக்கு சிகிச்சை தரவும் உதவுகின்றன.

துளசி

துளசி தாவரத்திற்கு தனித்துவமான மருத்துவ குணங்கள் உள்ளதால், இது ‘மூலிகைகளின் ராணி’ என்று பரவலாக அழைக்கப்படுகிறது.

Thulasi

இந்து மதத்தை பின்பற்றும் பல குடும்பங்களின் தோட்டங்களில் வளர்க்கப்படும் முக்கிய தாவரமாக துளசி உள்ளது.

துளசி இலைகளில் ஆன்ட்டிஆக்ஸிடன்ட்களும், பூஞ்சைகளை எதிர்க்கும் பண்புகளும் நிறைந்துள்ளன.
எனவே, சளி மற்றும் காய்ச்சலுக்கு துளசி ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.

ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சிக்கு (பிரான்கைட்டிஸ்) சிகிச்சையளிக்க உதவும் மருத்துவ ஃபார்முலேஷன்களில் துளசி இலைகள் முக்கிய உட்பொருட்களில் ஒன்றாக சேர்க்கப்படுகின்றன.

நெல்லிக்காய்

நெல்லிக்காய் தைலம் உச்சந்தலையை குளிரச் செய்யும். கருமையான தலை முடியை வளரச் செய்யும்.

இது இதயத்துக்கு வலிமையை வழங்கி வாழ்நாளை நீட்டிக்கும் காயகல்பம் ஆகும்.

நெல்லிக்காய்

குறைந்த செலவில் உயர்ந்த பலனைத் தரும். தமிழ் இலக்கியங்களில் நெல்லிக்காய்க்கு நல்லிடம் கிடைத்திருக்கிறது.

சளி தொந்தரவிற்கு சிகிச்சையளிப்பதற்கு மட்டுமில்லாமல், இது செரிமான பிரச்சினைகளையும் சீராக்கி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

இதில் உள்ள ஆன்ட்டிஆக்ஸிடன்ட்கள் இரத்த குளுக்கோஸ் அளவை ஒழுங்குபடுத்தி, நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது.

தூதுவளை

தூதுவளை

இது நெருக்கமான வளைவுள்ள முட்களையுடைய கொடி. இதில் புரதம், தாது உப்பு, கரிநீர், சுண்ணாம்பு ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன.

தூதுவளை

எந்த சூழ்நிலையிலும் வளரும் பண்பினைப் பெற்றது இது. கபம், ஆஸ்துமா, வயிறு சம்பந்தமான நோய் ஆகிய எல்லா நோய்களுக்கும் தூதுவளை மருந்தாகப் பயன்படுகிறது.

தூதுவளைச் சாறு, எலுமிச்சம் பழச்சாறு, சிறிது உப்பு கலந்து சாப்பிட்டால் வயிறு தொடர்புடைய நோய்கள் நீங்கும்.

எலுமிச்சை மரம்

எலுமிச்சை மரம்

வீட்டில் வளர்க்க்கபப்டும் எளிதான மருத்துவ தாவரங்களில் ஒன்றாகும், அதை நீங்கள் ஒரு சிறிய தொட்டியில் கூட வளர்க்கலாம். சில அறிக்கைகளின்படி, எலுமிச்சைச் செடி எண்ணற்ற சிகிச்சை மற்றும் பிற ஆரோக்கிய நலன்களைக் கொண்டிருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது,

வீட்டில் வளர்க்க வேண்டிய முக்கிய மருத்துவ தாவரங்கள் - எவை தெரியுமா..! | 5 Most Powerful Medicinal Plants And Benefits

இது தேநீர், சாலடுகள், சூப்களில் பயன்படுத்தப்படுகிறது மற்றும் எலுமிச்சையின் அற்புதமான சுவை கிட்டத்தட்ட அனைத்து உணவுகளிலும் உள்ளது.

நரம்பியல் மற்றும் மன அழுத்தம் தொடர்பான நிலைகளில் எலுமிச்சை இலைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது, ஆண்டிபிரைடிக் காய்ச்சலைக் குறைக்க உதவுகிறது. சில சுவாச நிலைகள் மற்றும் தொண்டை நோய்த்தொற்றுகளுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

வயிற்றுவலி, தலைவலி, மூட்டுவலி, தசைவலி, செரிமான மண்டலம், தசைப்பிடிப்பு, வயிற்றுவலி உள்ளிட்ட அனைத்து வகையான வலிகளுக்கும் இதைப் பயன்படுத்தலாம்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.