Home உலகம் காசாவில் தொடரும் முள்ளிவாய்க்கால் பேரவலம் :2400 ற்கு விற்கப்படும் 05 ரூபாய் பிஸ்கட்

காசாவில் தொடரும் முள்ளிவாய்க்கால் பேரவலம் :2400 ற்கு விற்கப்படும் 05 ரூபாய் பிஸ்கட்

0

 காசா(gaza) மீது இஸ்ரேல்(israel) தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது இதனால் இடப்பெயர்வும் உயிரிழப்பும் அங்கு சர்வ சாதாரணமாகிவிட்டது.

அங்கு உணவிற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நிவாரண தொடரணியை ஒழுங்காக விடுவதில் இஸ்ரேல் பெரும் முட்டுக்கட்டையை விதித்து வருகிறது. இதனால் அங்கு உணவுப்பொருட்களின் விலைகள் பன்மடங்கு அதிகரித்து விட்டது. 

தந்தையின் பதிவு

இந்நிலையில், காசாவைச் சேர்ந்த முகமது ஜாவத்  எனும் தந்தை தன் குழந்தைக்கு பிடித்தமான பார்லே — ஜி பிஸ்கட்டை வாங்கி தந்த காணொளியை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

அதன் விலை தற்போது 2,400 ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும், இருப்பினும் குழந்தையின் ஆசைக்காக வாங்கி தந்தாக அதில் கூறியுள்ளார்.

குறிப்பாக அந்த பிஸ்கட்டின் உண்மையான விலை வெறும் ரூபா 05 என தெரிவிக்கப்படுகிறது.

இதை பார்த்து பலர் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். 

காசாவின் இந்த நிலைமையே முள்ளிவாய்க்கால் இறுதி யுத்த தருணங்களிலும் தமிழ் மக்கள் எதிர்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version