முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

5 சிறந்த கடற்படை வீரர்களை இழந்த அமெரிக்கா

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பயிற்சியின் போது ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 5 கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

கிரீச் விமானப்படை தளத்திலிருந்து வழக்கமான பயிற்சிக்காக CH-53E சூப்பர் ஸ்டாலியன் ஹெலிகாப்டரில் கடற்படையினர், மரைன் கார்ப்ஸ் விமான நிலைய மிராமருக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், மியன்மாருக்கு சென்ற குறித்த ஹெலிகாப்டர் காணாமல் போயுள்ளது, அதையடுத்து ஹெலிகாப்டரை தேடும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிரடியாக மாற்றப்பட்ட உக்ரைனின் ஆயுதப்படை தளபதி

அதிரடியாக மாற்றப்பட்ட உக்ரைனின் ஆயுதப்படை தளபதி

விபத்து

அதனை தொடர்ந்து, அந்த ஹெலிகாப்டர் கலிபோர்னியாவின் பைன் பள்ளத்தாக்கில் மலையில் மோதி விபத்துக்குள்ளான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

5 சிறந்த கடற்படை வீரர்களை இழந்த அமெரிக்கா | 5 Us Marines Killed Helicopter Crash

விபத்தில் சிக்கிய 5 கடற்படை வீரர்களும் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

மீட்கும் முயற்சிகள்

மேலும், மேஜர் ஜெனரல் மைக்கேல் ஜே. போர்க்சுல்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹெலிகாப்டர் பயிற்சியின்போது, 3டி மரைன் ஏர்கிராப்ட் விங் மற்றும் பறக்கும் புலிகள் பிரிவுகளைச் சேர்ந்த 5 சிறந்த கடற்படை வீரர்கள் உயிரிழந்ததை மிகவும் கனத்த இதயத்துடனும் ஆழ்ந்த சோகத்துடனும் பகிர்ந்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

5 சிறந்த கடற்படை வீரர்களை இழந்த அமெரிக்கா | 5 Us Marines Killed Helicopter Crash

அதேவேளை, விபத்தில் உயிரிழந்த கடற்பயினரின் உடல்கள் மற்றும் உபகரணங்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றதோடு இது தொடர்பான விசாரணையும் நடைபெற்று வருகிறது.

50 ஆண்டுகளில் காணாமல் போன கடல்..! வெளியானது காரணம்

50 ஆண்டுகளில் காணாமல் போன கடல்..! வெளியானது காரணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்