Home இலங்கை சமூகம் சி.ஐ.டி விசாரணைகளை துரிதப்படுத்துவதற்காக நியமிக்கப்படவுள்ள அதிகாரிகள்

சி.ஐ.டி விசாரணைகளை துரிதப்படுத்துவதற்காக நியமிக்கப்படவுள்ள அதிகாரிகள்

0

நாட்டில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்கு 10,000 புதிய அதிகாரிகளை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல (Sunil Watagala) தெரிவித்துள்ளார்.

காவல்துறைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும் குறித்த அதிகாரிகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம்

அவர் மேலும் தெரிவிக்கையில், “குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் தற்போது 24 மணித்தியாலமும் பணியாற்றுகின்றனர்.

இவற்றிலிருந்த அரசியல் தலையீடுகளை நாம் நீக்கியுள்ளதால் அதிகாரிகள் சிறப்பாகச் செயற்படுகின்றனர்.

எனினும், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் அதிகாரிகளுக்குப் பற்றாக்குறை நிலவுகின்றது.

இதனால், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் காவல்துறைக்கும் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் 5,000 பேரை ஆட்சேர்ப்பு செய்யவுள்ளோம்.

அத்துடன், 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மேலும் 5,000 பேரை ஆட்சேப்புச் செய்யவுள்ளோம்” என சுனில் வட்டகல மேலும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version