Home சினிமா 7 நாட்களில் டிராகன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

7 நாட்களில் டிராகன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

டிராகன் 

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த டிராகன் படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இப்படத்தின் 7 நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.

ஓ மை கடவுளே படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை கொடுத்தார். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் தமிழில் உருவான திரைப்படம் டிராகன்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மிஸ்கின், கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். லியோஸ் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

பாக்ஸ் ஆபிஸ்

கடந்த வாரம் வெளிவந்த இப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.

இந்த நிலையில் 7 நாட்களை வெற்றிகரமாக டிராகன் திரைப்படம் கடந்துள்ள நிலையில், உலகளவில் ரூ. 80 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்துள்ளது. மேலும் இன்னும் ஓரிரு நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் என கூறப்படுகிறது.

Source: https://cineulagam.com/article/7-days-box-office-of-dragon-movie-1740709281

NO COMMENTS

Exit mobile version