Home இலங்கை சமூகம் காட்டு யானை தாக்கியதில் 7 வயது சிறுமி பலி

காட்டு யானை தாக்கியதில் 7 வயது சிறுமி பலி

0

ஹம்பாந்தோட்டையில்(Hambantota) காட்டு யானை தாக்கியதில் 7 வயது சிறுமி பலி

ஹம்பாந்தோட்டை சினுக்குகல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 7 வயது சிறுமி
ஒருவர் பலியானார்.

உயிரிழந்தவர் பாடசாலையில் 2 ஆம் வகுப்பில் கல்வி கற்பதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சிறுமி பலி

இந்தநிலையில் யானை தாக்குதலில் படுகாயமடைந்த அவரது தந்தையும் ஹம்பாந்தோட்டை
மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை 6.00 மணியளவில் சிறுமி தனது தந்தையுடன் விவசாய நிலத்திற்கு
சென்றிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாடசாலை விடுமுறை என்பதால், சிறுமி தனது தந்தைக்கு விவசாய நடவடிக்கைகளில் உதவி
செய்து கொண்டிருந்தபோது, காட்டு யானை இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version