அநுராதபுரத்தில் உள்ள நுவரவெவ வனப்பகுதிக்குச் சொந்தமான நிலங்களை சுமார் 712
அரசியல்வாதிகள் கையகப்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன், நீச்சல் குளங்களுடன் கூடிய வீடுகள் மற்றும் விருந்தாகங்களை அவர்கள்
கட்டியுள்ளனர் என்று, பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க இன்று(21.05.2025) நாடாளுமன்றத்தில்
தெரிவித்துள்ளார்.
இதுபோன்று நிலங்களை கையகப்படுத்துவது அண்மைக் காலமாக ஒரு அரசியல் விளையாட்டாக
மாறிவிட்டது என்று அவர் கூறியுள்ளார்.
அரசியல் விளையாட்டு
இந்தநிலையில், முன்னைய அரசாங்கத்தில் இருந்த சில அமைச்சர்களும் இந்த
அரசியல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர் என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
