Home இலங்கை சமூகம் நாட்டில் இதுவரை 73 துப்பாக்கிச் சூடுகள்..! பலர் உயிரிழப்பு

நாட்டில் இதுவரை 73 துப்பாக்கிச் சூடுகள்..! பலர் உயிரிழப்பு

0

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் இலங்கையில் 73 துப்பாக்கிச்சூட்டுச்
சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களின் போது 38 பேர் உயிரிழந்துள்ளதுடன் 43
பேர் காயமடைந்துள்ளனர்.

அதிகளவான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பாதாள உலகக் கும்பல்களுக்கு
இடையிலான மோதல்கள் காரணமாக இடம்பெற்றுள்ளன.

துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள்

இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 24
துப்பாக்கிதாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் மேலும்
குறிப்பிட்டனர்.

இதேவேளை, இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களுக்கு உதவி செய்த
குற்றத்துக்காக 150 பேரும், மோட்டார் சைக்கிள்களைச் செலுத்திய குற்றத்துக்காக
15 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version