Home இலங்கை சமூகம் அரிசி தொடர்பில் வடக்கு மாகாணத்தில் 774 சுற்றிவளைப்புக்கள்

அரிசி தொடர்பில் வடக்கு மாகாணத்தில் 774 சுற்றிவளைப்புக்கள்

0

அரிசி தொடர்பில் வடக்கு மாகாணத்தில் 774 விசேட சுற்றிவளைப்புக்கள்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையின் வடக்கு மாகாண
உதவிப்பணிப்பாளர் அப்துல் லத்தீவ் ஜக்வார் சாதிக் தெரிவித்துள்ளார். 

அரிசி விற்பனை தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும்
கூறுகையில்,

“அரிசி விலை மற்றும் பதுக்கல் தொடர்பில் கவனம் செலுத்தி 2024ஆம் ஆண்டு அரிசி
விற்பனை தொடர்பாக வடக்கு மாகாணத்தில் 774 விசேட சுற்றி வளைப்புக்கள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பெரியளவிலான பதுக்கல்கள்

அத்துடன், வவுனியா மாவட்டத்தில் அரிசி தொடர்பில் 126 விசேட
சுற்றிவளைப்புக்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனினும், வடக்கு மாகாணத்தில் பெரியளவிலான பதுக்கல்கள் எதுவும் இடம்பெறவில்லை” என தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version