Home இலங்கை சமூகம் 8 பில்லியன் ரூபாய்கள் வரி நிலுவை: உரிமங்களை இழக்கப்போகும் மது உற்பத்தி நிறுவனங்கள்

8 பில்லியன் ரூபாய்கள் வரி நிலுவை: உரிமங்களை இழக்கப்போகும் மது உற்பத்தி நிறுவனங்கள்

0

Courtesy: Sivaa Mayuri

டபிள்யூ. எம். மென்டிஸ் அண்ட் கோ லிமிடெட் உள்ளிட்ட ஐந்து முன்னணி மதுபான உற்பத்தி நிறுவனங்கள், தமது மதுபான உற்பத்தி உரிமங்களை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2024 நவம்பர் 30 ஆம் திகதிக்குள், குறித்த நிறுவனங்களின் 8.5 பில்லியன் திரட்டப்பட்ட வரி நிலுவைத் தொகை தீர்க்கப்படாவிட்டால் இந்த ஆபத்தை குறித்த நிறுவனங்கள் எதிர்கொள்ளக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செலுத்த வேண்டிய வரி 

இந்த தொகையில் மெண்டிஸ் நிறுவனமே ஆகக்கூடிய 5.5 பில்லியன் ரூபாய் வரியை செலுத்த வேண்டியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

திறைசேரியின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து மதுவரித்திணைக்களம், இந்த மாத ஆரம்பத்தில், புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், நாட்டில் ஐந்து பெரிய அளவிலான மதுபானங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், இந்த மாத இறுதியில் தங்கள் வரி நிலுவைத் தொகையை தீர்க்கவேண்டும் என்று நினைவூட்டப்பட்டுள்ளது.

களுத்துறையின் சினெர்ஜி டிஸ்டில்லரிகள், குருணாகலயின்; வயம்ப டிஸ்டில்லரிகள், பின்லாந்து டிஸ்டில்லரீஸ், ஹிங்குரானா டிஸ்டில்லரீஸ் லிமிடெட் மற்றும் டபிள்யூ. எம். மென்டிஸ் அண்ட் கோ என்பனவே இந்த நிறுவனங்களாகும்.

முன்னதாக ஆறாவது உற்பத்தியாளரான ரன்தெனிகல டிஸ்டில்லரிகளில் லங்கா (பிரைவேட்) லிமிடெட் அண்மையில் மதுவரித்திணைக்களத்துக்கு தமது நிலுவைத் தொகையை செலுத்தியுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version